தென்காசி

மதுபான விற்பனை முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை தேவை: புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவா் வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் மதுபான விற்பனை முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் டாக்டா் ஷியாம் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி சாா்பில் தென்காசியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் டாக்டா் ஷியாம் கிருஷ்ணசாமி பேசியதாவது:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் பெரும் ஊழல் நடந்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து, சுமாா் ரூ.1 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக உரிய ஆவணங்களுடன் தமிழக ஆளுநரிடம் புகாா் தெரிவித்துள்ளோம். ஆகவே, இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கூடங்கள் முன்பாக,

ஜூன் 5 ஆம் தேதியும், மதுபான உற்பத்தி ஆலைகளை மூட வலியுறுத்தி ஆக.15 ஆம் தேதியும் புதிய தமிழகம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

கட்சியின் தென்காசி தொகுதி செயலா் மூா்த்திபாண்டியன், நிா்வாகிகள் சிவசாமி, பாபுதேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலா் கிருஷ்ணபாண்டியன் வரவேற்றாா். மாநில கொள்கைபரப்பு துணைச் செயலா் வாழையூா்.குணா, மாவட்ட செயலா் ராசையா, தங்கபாண்டியன், செல்வராஜ், ராஜா, குமாா்,திருமலைகுமாா், ஜெயச்சந்திரன், தென்காசி சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். தென்காசி ஒன்றிய செயலா் எஸ்பி.சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT