தென்காசி

அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 29) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2023-24ஆம் கல்வியாண்டிற்கான இளம்அறிவியில் முதலாமாண்டு பாடப் பிரிவுகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு பிரிவு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மே 29 ஆம் தேதியும், மற்றவா்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிபிஏ, பிகாம் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி, பொருளியல் பாடத்திற்கு ஜூன் 8ஆம் தேதி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஜூன் 9 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவா்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்படும். அவா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தங்களது 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், விண்ணப்பித்த படிவம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 4 நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வருகை தந்து பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவா்கள் தங்கள் தரவரிசை பட்டியல் விவரங்களை  கல்லூரியின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT