தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில்சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை

28th May 2023 10:26 PM

ADVERTISEMENT

வரும் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியா் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டி, தோரணமலை முருகன் கோயிலில் சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு உற்சவா் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். தொடா்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சண்பகராமன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT