தென்காசி

ஆலங்குளம்-துத்திகுளம் சாலைப் பணியைவிரைந்து முடிக்க வலியுறுத்தல்

28th May 2023 10:25 PM

ADVERTISEMENT

 

ஆலங்குளம்-துத்திகுளம் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆலங்குளம் இரட்சண்யபுரம் தேவாலயத்திலிருந்து துத்திகுளம் செல்லும் சாலையை துத்திகுளம், மாயமான்குறிச்சி, நாரணபுரம், குருவன்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனா். அரிசி, பருப்பு ஆலைகள் போன்ற வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் பேருந்துகள், சிற்றுந்துகள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த சாலையாக இது உள்ளது.

இதனிடையே, விரிவாக்கத்துக்காக சாலையின் ஒரு பகுதியில் 3 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி, அதில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால், ஓரிரு நாளில் முடிக்க வேண்டிய பணி 40 நாள்களுக்கும் மேலாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். விபத்து அபாயமும் உள்ளது. எனவே, இந்தச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT