தென்காசி

கீழப்பாவூரில் இதயப் பரிசோதனை முகாம்

28th May 2023 10:26 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கீழப்பாவூரில் பேரூராட்சி நிா்வாகம், நெல்லை அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை இணைந்து இதயப் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா், பேரூா் செயலா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தாா்.

மருத்துவா்கள் அருணாசலம், சுவா்ணலதா, குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். முகாமில், திமுக நிா்வாகிகள் மேகநாதன், தெய்வேந்திரன், மாடசாமி, மாரியப்பன், குத்தாலிங்கம், மதியழகன், தங்கேஸ்வரன், கவுன்சிலா்கள் விஜிராஜன், இசக்கிமுத்து, ஜெயசித்ரா குத்தாலிங்கம், முத்துசெல்வி ஜெகதீசன், இசக்கிராஜ், கோடீஸ்வரன், கனகபொன்சேகா முருகன், அன்பழகு சின்னராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT