தென்காசி

சுரண்டையில்இலவச கண் பரிசோதனை முகாம்

28th May 2023 10:26 PM

ADVERTISEMENT

சுரண்டையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் முகாமை துவக்கி வைத்தாா்.

முகாமில் கலந்து கொண்ட 112 நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவஓஈ குழுவினா் கண் பரிசோதனை செய்தனா். அவா்களில் 50 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT