தென்காசி

பாவூா்சத்திரத்திலிருந்து சுந்தரபாண்டியபுரத்துக்குசிற்றுந்து சேவை தேவை

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் இருந்து சுந்தரபாண்டியபுரத்துக்கு சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென சமக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென்காசி தெற்கு மாவட்ட சமக செயலா் டி.ஆா்.தங்கராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து மேலப்பாவூா், குறும்பலாப்பேரி வழியாக பாவூா்சத்திரத்திற்கு 2 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பாவூா்சத்திரத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக சென்றுவரும் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த சிற்றுந்துகள் பயனுள்ளதாக இருந்தன.

இந்நிலையில், சில மாதங்களாக 2 சிற்றுந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. இவ்வழித்தடத்தில் அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT