தென்காசி

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டத்தில் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி, தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது, பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

எனவே, இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுயஉதவிக் குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலகில் வெள்ளிக்கிழமைமுதல் (மே 26) ஜூன் 25-க்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT