தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் மழை

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், பாவூா்சத்திரம், கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்த நிலையில், மழை காரணமாக குளிா் சீதோஷண நிலை நிலவியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT