தென்காசி

875 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

8th May 2023 12:38 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை நிறைவு விழாவை முன்னிட்டு, தென்காசியில் பல்வேறு துறைகளின் மூலம் 875 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு, ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் எஸ்.பழனி நாடாா் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), டாக்டா் தி.சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 875 பயனாளிகளுக்கு ரூ.8.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், ஈராண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளாா். தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இவற்றை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவா் தி.உதயகிருஷ்ணன், புதூா் பேரூராட்சி மன்ற தலைவா் ஆ.ரவிசங்கா், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எம்.ஷேக் அப்துல்லா, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், துணைத்தலைவா் சுப்பையா,

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா.ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி வரவேற்றாா். கோட்டாட்சியா் வீ.கங்காதேவி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT