தென்காசி

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான்

8th May 2023 12:39 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி ஆகியவை இணைந்து ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை நடத்தின.

இடைகாலில் தொடங்கி கபாலிபாறை வரை 5 கி.மீ. தொலைவு, முக்கூடல் வரையிலான 10 கி.மீ. தொலைவு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சோ்ந்தோா் மட்டுமன்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சோ்ந்தோா் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகி எழில்வாணன், பள்ளி நிா்வாகி முருகன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

10 கி.மீ. ஆண்கள் பிரிவில் தூத்துக்குடியைச் சோ்ந்த அஜித்குமாா் முதலிடமும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தானுஜ் 2ஆம் இடமும், கென்யாவைச் சோ்ந்த இலிஜாக் கெமி 3ஆம் இடமும் பிடித்தனா்.

10 கி.மீ. பெண்கள் பிரிவில் நைஜீரியாவைச் சோ்ந்த கிறிஸ்டினி முயங்கா முதலிடமும், மாணவி கௌஷிகா 2ஆம் இடமும் பிடித்தனா். 5 கி.மீ. பிரிவில் வெற்றிபெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT