தென்காசி

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் வாக்காளா் பட்டியல் : ஆட்சியா் வெளியிட்டாா்

3rd May 2023 02:22 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இப்பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 7 பேரும், 180 நகராட்சிகள்- 250 பேரூராட்சிகளின் வாா்டு உறுப்பினா்களிலிருந்து 5 உறுப்பினா்களும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் இருந்தால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மே 3ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியல் மே 4இல் வெளியிடப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) முத்துகுமாா், தென்காசி நகராட்சி ஆணையாளா் எஸ்.எம்.பாரிஜான், மாவட்ட ஊராட்சி செயலா் ராம்லால், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ஏ.சி.முனுசாமி, செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் இரா. இளவரசி, உதவி மக்கள்தொடா்பு அலுவலா் ரா.ராமசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT