தென்காசி

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

3rd May 2023 02:17 AM

ADVERTISEMENT

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு கோயில் கலையரங்கில் மண்டகபடிதாரா்களால் கலைநிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சப்பர வீதி உலாவும் நடைபெறும்.

9ஆம் திருநாளான மே 10ஆம் தேதி மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடா்ந்து ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டமும் நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள், ஏழு சமுதாய கட்டளைதாரா்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT