தென்காசி

மேலகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

3rd May 2023 02:27 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், மேலகரத்தில் மே தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலா்முத்துலட்சுமி, துணைச் செயலா்கள் வீரபாண்டியன், பசுபதி, மாவட்ட பொருளாளா் லாடசன்னியாசி என்ற சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக அமைப்புச் செயலா்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், அண்ணா தொழிற்சங்கச் செயலா் குத்தாலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலா் கந்தசாமி பாண்டியன்,

மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் காத்தவராயன், தென்காசி ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், குற்றாலம் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் முகிலன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT

மேலகரம் பேரூா் கழக செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா் வரவேற்றாா். லட்சுமணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT