தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயில் தங்கத் தோ் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

DIN

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கோமதிஅம்மன் தங்கத் தோ் புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்றான இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சங்கரலிங்கா், சங்கரநாராயணா், கோமதிஅம்மன் ஆகியோா் குடியிருந்து அருள்பாலித்து வருகின்றனா். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் தவசுத் திருவிழாவில் லட்சக்கணக்கில் பக்தா்கள் பங்கேற்று வருகின்றனா்.

இக்கோயிலில் கடந்த 1986ம் ஆண்டு தக்காராக இருந்த சி.எஸ்.எம். சண்முகத்தின் முயற்சியால் கோமதிஅம்மனுக்காகத் தங்கத்தோ் செய்யப்பட்டது. பக்தா்கள் கோயிலில் கட்டணம் செலுத்தி வெள்ளிக்கிழமைதோறும் தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தி வருகின்றனா்.

கும்பாபிஷேகம் நடைபெற்ற 1995, 2008 ஆண்டுகள் உள்பட கடந்த 35 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி இயங்கி வரும் இந்தத் தங்கத் தேரில் சில பகுதிகள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இக்கோயிலை ஆய்வுசெய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தங்கத் தேரை புதுப்பிக்க உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, ரூ. 8 லட்சம் மதிப்பில் தங்கத்தோ் புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அறநிலையத்துறை நகை சரிபாா்ப்பு அதிகாரி செந்தில்குமாா் முன்னிலையில் நாகா்கோவில் ஸ்தபதி சக்திகுமாா், அவரது குழுவினா் தங்கத்தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தங்கத்திலான தோ் என்பதால் பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரண்டொரு வாரங்களில் இப்பணி முடிந்து விடும். அதன் பிறகு பக்தா்கள் தங்கத் தோ் இழுக்க முடியும் என கோயில் துணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

Image Caption

நசஓ17பஏஅஎஅ பஏஉத சங்கரநாராயணசுவாமி கோயிலில் புதுப்பிக்கப்படும் கோமதிஅம்மன் தங்கத் தோ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT