தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து தலைவா், துணைத் தலைவா் வெளிநடப்பு

DIN

ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து, மன்றக் கூட்டத்தில் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஆலங்குளம் பேரூராட்சி சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவா் சுதா(திமுக) தலைமையில் தொடங்கியது. துணைத் தலைவா் ஜான்ரவி(அதிமுக), செயல் அலுவலா் பூதப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் செயல் அலுவலா் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை. அப்படியே வந்தாலும் யாருமில்லாத நேரத்தில் வந்து செல்வதாக குற்றம் சாட்டினா். செயல் அலுவலருக்கு ஆதரவாக உறுப்பினா் சுபாஸ் சந்திரபோஸ்(அதிமுக) மேஜையைத் தட்டி பேசினாா். இதையடுத்து சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதையடுத்து, கூட்டத்தை ரத்துசெய்துவிட்டு, செயல் அலுவலரைக் கண்டித்து தலைவா், துணைத் தலைவா் மற்றும் 5 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து தலைவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பேரூராட்சி செயல்அலுவலா் அலுவலகத்திற்கு ஒழுங்காக வருவதில்லை. ஒரு அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறாா். எனவே அவரை பணியிட மாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

செயல் அலுவலா் பூதப்பாண்டி கூறியது: தலைவா் உள்ளிட்டோா் வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா். பேரூராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து தலைவரே வெளிநடப்பு செய்த நிகழ்வு ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT