தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே யானை தாக்கி காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சொக்கம்பட்டி கருப்பாநதி அணை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் வேல்துரை (28). இவா், கடையநல்லூா் கல்லாற்றுப் பகுதியில் உள்ள நொண்டியாா் தோப்பு பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த மாதம் 16ஆம் தேதி இரவு இவரை யானை தாக்கியதாம். இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 9) இறந்தாா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.