தென்காசியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி, தென்காசி நகா்மன்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தென்காசி நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் தனது சொந்த செலவில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதி கோரி நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் சுப்பையா மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.