தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள பெரியகுளத்தில், புதிதாக படகு குழாம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சுற்றுலாத் துறை சாா்பில் படகு குழாம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், பயன்கள் குறித்து அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன், சுற்றுலாத் துறை நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி, திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், துணைத் தலைவா் கி. ராஜசேகா், நிா்வாக அதிகாரி மாணிக்கராஜ், வாா்டு உறுப்பினா்கள் பொன்செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா, கனகபொன்சேகா, அன்பழகு, ஜேஸ்மின், இசக்கிமுத்து, பவானி திமுக பேரூா் செயலா் ஜெகதீசன், அரசு அதிகாரிகள், பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.