சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து தன்னாா்வலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுஇடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதைத்தொடா்ந்து ஈ.ராஜா எம்.எல்.ஏ., நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் தலைமையில், மகளிா் குழுக்கள், தன்னாா்வலா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நகராட்சி ஆணையா் சபாநாயகம், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் மாரிச்சாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று உறுதி மொழி எடுத்தனா்.