சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தாா்.
சிவகிரி அருகேயுள்ள உள்ளாரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ராமா் (55). இவா் இப் பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். வியாழக்கிழமை மாலை வயலுக்குச் சென்ற அவா், வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் தேடிப் பாா்த்தபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்புத் துறையினா் ராமரின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.