தென்காசி

தென்காசி திருக்கு விழாவில் பட்டிமன்றம்

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 96ஆவது திருக்கு விழாவில் 6ஆம் நாளான வியாழக்கிழமை திருக்கு அவதானம், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.

தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற திருக்கு அவதானம் நிகழ்ச்சியை வே.சண்முகப்பாண்டி தொடங்கி வைத்தாா். இராம.கனகசுப்புரத்னம் விளக்கிப் பேசினாா்.

மாலையில் வள்ளுவத்தின் பெருநோக்கம் தனிமனித அறமா, சமுதாய அறமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.தெ.ஞானசுந்தரம் வாழ்த்திப் பேசினாா்.

தனிமனிதஅறமே என்ற தலைப்பில் இந்திரா ஜெயச்சந்திரன், சேரை.ப.பாலகிருஷ்ணன், பி.உமாசங்கா் ஆகியோரும், சமுதாயஅறமே என்ற தலைப்பில் எழுத்தாளா் சு.லட்சுமணப்பெருமாள், த.சரவணசெல்வன், முனைவா் ச.குரு ஞானாம்பிகா ஆகியோரும் வாதிட்டனா்.

மருத்துவா் அப்துல்அஜீஸ், கருவூலா் இராம.தீத்தாரப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திருவள்ளுவா் கழகத் தலைவா் ந.கனகசபாபதி வரவேற்றாா். துணைத் தலைவா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT