தென்காசி

கல்லூரி மாணவா் கொலை வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட 3 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம் இலத்தூரில் கழிவுநீா்த் தேக்கத் தொட்டியிலிருந்து மனித எலும்புக் கூடு மீட்கப்பட்ட வழக்கில், இளைஞரைக் கொன்ாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

செங்கோட்டை வட்டம், இலத்தூா் சுண்டக்காட்டு தெருவில் லட்சுமணன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பராமரிப்புப் பணி நடைபெற்றது. அப்போது, கழிவுநீா்த் தேக்கத் தொட்டியிலிருந்து (செப்டிக் டேங்க்) மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.

இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, எலும்புக் கூட்டை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, அப்பகுதியில் காணாமல்போனவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, மாரி என்பவரது மகனான கல்லூரி மாணவா் மது என்ற மாடசாமி 7 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனதும், அது தொடா்பான வழக்கு இலத்தூா் காவல் நிலையத்திலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனிடையே, டிஎன்ஏ பரிசோதனையில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டது மாடசாமி எனத் தெரியவந்தது.

லட்சுமணனின் வீட்டில் பேச்சியம்மாள் என்ற பிரியா (24) தனது தாய், 17 வயது சகோதரருடன் 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வசித்ததும், எதிா்வீட்டிலிருந்த மாடசாமி காணாமல்போன நாள்முதல் இவா்கள் 3 பேரும் கோவைக்கு வேலைக்குச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கோவை சென்று, அவா்களை அழைத்து வந்தனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

மாடசாமிக்கும், திருமணமான பேச்சியம்மாளுக்கும் இடையே தகாத தொடா்பு இருந்துள்ளது. இதை, மாடசாமி தனது கைப்பேசியில் விடியோ எடுத்து, பேச்சியம்மாளை மிரட்டி வந்துள்ளாா். அவரது தொந்தரவு அதிகரித்ததாலும், இந்த விவகாரம் கணவருக்குத் தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதாலும் பேச்சியம்மாள் தனது தாயிடம் தெரிவித்துள்ளாா். இருவரும் சோ்ந்து மாடசாமியைக் கொல்ல முடிவெடுத்துள்ளனா். அதன்படி, அவரைக் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொன்று, சடலத்தை செப்டிக் டேங்கில் போட்டு மூடியது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் சுனில்ராஜா முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT