சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டி பயணியா் நிழற்குடையிலிருந்து, பிறந்து 2 நாள்களே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது.
அங்கு பேருந்துக்குகாக வந்தவா்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பாா்த்தனா். அதில், குழந்தை துணியால் சுற்றப்பட்டு தொப்புள் கொடியுடன் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், ஊழியா்கள் வந்து குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையை விட்டுச்சென்றது யாா் என விசாரித்து வருகின்றனா்.