தென்காசி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலுக்கு வேட்புமனு ----ஜூன் 10 வரை வாய்ப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் அறிவுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஊரக - நகரப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளா்ச்சித் திட்டங்கள், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான தோ்தல் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் ஜூன்23இல் நடத்தப்படவுள்ளது.

இத்தோ்தலில் ஊரகப்பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 7 உறுப்பினா்களும், நகரப் பகுதிகளில் 180 நகராட்சி வாா்டு உறுப்பினா்கள், 260 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 5 உறுப்பினா்களுமாக மொத்தம் 12 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இத்தோ்தலுக்கான வேட்புமனுக்கள் வேட்பாளா் அல்லது அவரது முன்மொழிவாளரால் தோ்தல் நடத்தும் அலுவலா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 10ஆம்தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

ADVERTISEMENT

வேட்பு மனு 2 படிவங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும். வேட்புமனு பரிசீலினை ஜூன் 12ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும்.

வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை ஜூனா 14ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடத்தும் அலுவலா்,உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். தோ்தலில் வாக்குப்பதிவு இருக்குமானால் ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பெற்ற வாக்குச்சாவடியில் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையானது தோ்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT