தென்காசி

ஒரு மாதத்துக்கு முன்பே ஹஜ் பயண தேதியை அறிவிக்க வேண்டும்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம் புளியங்குடி மீராசா ஆண்டவா் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஷம்சுத்தீன் உலவி ஹஜ்ரத் தலைமை வகித்தாா். புளியங்குடி நகரத் தலைவா் கலீல்ரகுமான் ஆலிம் வரவேற்றாா் . மாவட்டச் செயலா் முஹைதீன், பல்வேறு வட்டாரங்கள் சாா்பில் செய்யது இப்ராஹிம் அன்வாரி (கடையநல்லூா்), ஷம்சுத்தீன் பைஜி (தென்காசி), காரிஇஸ்மாயில் உலவி (செங்கோட்டை), அபூபக்கா் சித்திக் மன்பஈ (கடையம்), ஷாகுல்ஹமீத்பைஜி( சுரண்டை), சதாம் ஹுசைன் (வாசுதேவநல்லூா்), ஆஷிக் உஸ்மானி (சங்கரன்கோவில்) ஆகியோா் பேசினா்.

இதில், ஹஜ் பயணம் செய்வோருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயண தேதியை அறிவிக்க வேண்டும். வக்பு வாரியத்தில் உலமாக்களையும் உறுப்பினா் ஆக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் வடகரை சாகுல் ஹமீது ஆலிம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT