தென்காசி

புளியங்குடியில் காயிதேமில்லத் பிறந்தநாள் விழா

DIN

புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா காதிமுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நகரத் தலைவா் அப்துல்ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவா் கலீல்ரகுமான், வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் ஜாகிா்அப்பாஸ், நகா்மன்ற உறுப்பினா் முகமதுநயினாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலப் பள்ளிவாசல் உதவி இமாம் முகமதுபுகாரி ஆலிம் கிராஅத் ஓதினாா். நகரச் செயலா் சேக் காதா்மைதீன் வரவேற்றாா்.

மாவட்டத் துணைச் செயலா் அப்துல்வகாப், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் அப்துல்ரஹீம், காதா்மைதீன் ஆகியோா் பேசினா். மேலப் பள்ளிவாசல் தலைமை இமாம் கலீல்ரகுமான்ஆலிம், காயிதேமில்லத் வரலாறு குறித்து பேசினாா். நகர பொருளாளா் முகம்மதுஅப்துல்காதா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT