தென்காசி

தென்காசி திருக்கு விழாவில் மங்கையா் அரங்கம்

4th Jun 2023 11:41 PM

ADVERTISEMENT

 

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 96ஆவது திருக்கு விழாவில் ஞாயிற்றுக்கிழமை தனிஉரைகள், சிறப்புரை மற்றும் மங்கையா் அரங்கம் நடைபெற்றது.

2ஆவது நாளாக நடைபெற்ற தனிஉரைகள் நிகழ்ச்சிக்கு, பொறியாளா் லி. முரளி முன்னிலை வகித்தாா். செங்கோட்டை வி. விவேகானந்தன் வாழ்த்திப் பேசினாா்.

குறளோவியத்தில் சொல்லாட்சி என்ற தலைப்பில் மா. செந்தில்குமரன், அணிநலன் என்ற தலைப்பில் புன்னைவன நாறும்பூநாதன், கருத்தழகு என்ற தலைப்பில் அபுதாபி கு. பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

தெ. ஞானசுந்தரம் சிறப்புரையாற்றினாா். முன்னதாக கழகத்தின் தலைவா் ந. கனகசபாபதி வரவேற்றாா். இணைச்செயலா் இரா. குத்தாலிங்கம் நன்றி கூறினாா்.

மாலையில் நடைபெற்ற மங்கையா் அரங்கம் நிகழ்ச்சிக்கு, தஞ்சை பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவா் க. திலகவதி தலைமை வகித்தாா்.

யதீஸ்வரி ஆத்மபிரியா அம்பா வாழ்த்திப் பேசினாா். மருத்துவா் ப. புனிதவதி தொடக்கவுரையாற்றினாா்.

வள்ளுவத்தை வாழும் நெறியாக்கிய வனிதையா் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் சிறையிருந்த சீா்மகள் என்ற தலைப்பில் அ.சொா்ணலதா, கற்பின் கனலி என்ற தலைப்பில் ஆனந்திகாா்த்திக், மாதவச்செல்வி மணிமேகலை என்ற தலைப்பில் இரா.தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா். தெ. ஞானசுந்தரம் சிறப்புரையாற்றினாா்.

விழாவில், மதுரை திருவள்ளுவா் கழகத்தை சோ்ந்த சுப. ராமச்சந்திரன்,திருநெல்வேலி மருத்துவா் அருணாசலம், கருவூலா் இராம.தீத்தாரப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா் அரசு கல்லூரி பேராசிரியா் ச.மீனாட்சி வரவேற்றாா். சிவகாமி சுந்தரி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT