தென்காசி

இலத்தூரில் மனித எலும்புக் கூடு மீட்பு

4th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், இலத்தூரில் செப்டிக் டேங்கில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இலத்தூா் சுண்டகாட்டு தெரு தேவா் மண்டபம் அருகில் லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது அந்த வீட்டை சுத்தம் செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வீட்டில் உள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வதற்காக அதன் மேல் போடப்பட்டுள்ள மேல் மூடியை அகற்றியுள்ளனா். அப்போது தொட்டிக்குள் மனித எலும்புக் கூடு கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து லட்சுமணன் அளித்த தகவலின்பேரில், இலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் குமாா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன், துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா், இலத்தூா் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் தா்மராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் த எலும்புக் கூட்டை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT