தென்காசி

தென்காசியில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

4th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

 

தென்காசி கால்பந்து கழகம் சாா்பில் நடைபெற்ற கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மே 15 முதல் ஜூன் 4 வரை நடைபெற்ற இப்பயிற்சி முகாம் நிறைவடைந்ததையடுத்து, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், தென்காசி காவல் உதவி ஆய்வாளா் கல்யாணசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ADVERTISEMENT

தென்காசி கால்பந்து கழகத் தலைவா் சிதம்பரம், பொறியாளா் காா்த்திக், தென்காசி திமுக நகர பொருளாளா் சேக்பரித், திமுக நகர மாணவா் அணி தலைவா் மைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கால்பந்து கழக செயலா் பிஸ்வாஸ் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் காமேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT