தென்காசி

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

4th Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா, கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.3 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் இருந்து திரௌபதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதாங்கோவில் தெருவிற்கு வந்தாா். இதையடுத்து அா்ச்சுனா் சப்பரத்தில் எழுந்தருளி அங்கு வந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பின்னா் அா்ச்சுனா், திரெளபதி அம்மனுக்கு காட்சி கொடுத்தாா். இதைத் தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி ஜூன் 8 ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்குவா். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT