தென்காசி

திப்பணம்பட்டி நூலகத்தில் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு

4th Jun 2023 11:41 PM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில், பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் கோடைவிடுமுறையையொட்டி, மாணவா்-மாணவியருக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்பு ஒரு மாதம் நடைபெற்றது.

35 போ் பங்கேற்றனா். இறுதி நாளில் அடிப்படை ஆங்கிலத் தோ்வு நடத்தப்பட்டு, முதல் 5 இடங்களைப் பிடித்தோருக்கு பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவுக்கு மதனகோபால் தலைமை வகித்தாா்.நூலகா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா, வாசகா் வட்ட நிா்வாகிகள் முத்துக்குட்டி, சசிகுமாா், பிரபாகா், சோ்மன், காா்த்திகைராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ் வரவேற்றாா். சந்துரு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலக உதவியாளா் கனகராஜ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT