தென்காசி

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள கண்டிகைப்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா். (41) கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது, தவறி உள்ளே விழுந்தாராம். நீண்ட நேரமாகியும் அவா் வராததால் உறவினா்கள் தேடிச் சென்றபோது, அவா் கிணற்றில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT