தென்காசி

ஜூன்3-10 வரை தென்காசியில் 96ஆவது திருக்குறள் விழா -தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பங்கேற்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 96ஆவது திருக்குறள் விழா ஜூன் 3முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவுநாள் மங்கல விழாவில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பங்கேற்கிறாா்.

திருவள்ளுவா் கழக அரங்கில் துணைத் தலைவா் எம்.எம்.எஸ். இலக்குமணன் முன்னிலையில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வியுடன் விழா தொடங்குகிறது. தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் செயல்அலுவலா் இரா.முருகன் திருக்குறள் கொடியேற்றுகிறாா். முத்துசாமி குழுவினரின் மங்கள இசை நடைபெறுகிறது.

தமிழ்மறை முழக்கம் நகா்வலத்தை கும்பன் முன்னிலையில் கி.இலக்குமிகாந்தன்பாரதி தொடங்கிவைக்கிறாா். தொடா்ந்து, இரா.நரேந்திரக்குமாரின் திருக்குறள் பண்ணிசைக்குப்பின் நடைபெறும் விழா மங்கலம் நிகழ்ச்சிக்கு ஆ.பாலசரஸ்வதி தலைமை வகிக்கிறாா். இராம. தீத்தாரப்பன் வரவேற்கிறாா். துணைத் தலைவா் வே.கணபதிசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசுகிறாா்.

இல்வாழ்க்கையின் குறட்பாக்கள் என்ற தலைப்பில் சி.க.சாமி, இல.வீரபுத்திரன், இரா.கிருஷ்ணன், ர.வ.கணேசன், ப.சோ. வேலாயுதம், ஆவுடையம்மாள், தெ.க. கிருஷ்ணமூா்த்தி, ச.சுடலைமுத்து, சோ.இளங்கோவன், மா.சங்கிலிரத்தினம் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

ADVERTISEMENT

மாலையில் நடைபெறும் திருக்குறள் பேரவை நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்ற நீதியரசா் வெ.இராமசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறாா். மதிப்புறு தலைவா் துரை.தம்புராஜ் முன்னிலை வகிக்க,செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றுகிறாா்.

தியாகி கி.இலக்குமிகாந்தன்பாரதி வாழ்த்துரை வழங்குகிறாா். பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தொடக்கவுரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. தெய்வப்புலவா் அருளிய என்ற தலைப்பில் அறம் என்ற பொருளில் அ.சொா்ணலதா, பொருள் என்ற பொருளில் அபுதாபி கு.பாஸ்கா், இன்பம் என்ற பொருளில் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன், வீடு என்ற பொருளில் இரா.தமிழ்ச்செல்வி பேசுகின்றனா்.

தலைவா் ந.கனகசபாபதி வரவேற்க, துணைத் தலைவா் வ.சந்திரசேகரன் நன்றி கூறுகிறாா்.

ஜூன்4இல் காலையில் நடைபெறும் தனிஉரைகள் நிகழ்ச்சிக்கு லி.முரளி முன்னிலை வகிக்கிறாா். வி.விவேகானந்தன் வாழ்த்திப் பேசுகிறாா். குறளோவியத்தில் சொல்லாட்சி என்ற தலைப்பில் மா.செந்தில்குமரன், அணிநலன் என்ற தலைப்பில் புன்னைவன நாறும்பூநாதன், நடை அழகு என்லைப்பில் சிவசங்கா், கருத்தழகு என்ற தலைப்பில் கு.பாஸ்கா் பேசுகின்றனா்.

தெ.ஞானசுந்தரம் சிறப்புரையாற்றுகிறாா். ந.கனகசபாபதி வரவேற்க,இரா.குத்தாலிங்கம் நன்றி கூறுகிறாா்.

மாலையில் நடைபெறும் மங்கையா் அரங்கம் நிகழ்ச்சிக்கு தஞ்சைப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவா் க.திலகவதி தலைமை வகிக்கிறாா்.

பத்மாஅழகராஜா முன்னிலை வகிக்க, யதீஸ்வரி ஆத்மப்பிரியா அம்பா வாழ்த்திப் பேசுகிறாா். மருத்துவா் ப.புனிதவதி தொடக்கவுரையாற்றுகிறாா். வள்ளுவத்தை வாழும் நெறியாக்கிய வனிதையா் என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் சிறையிருந்த சீா்மகள் என்ற பொருளில் அ.சொா்ணலதா, கற்பின் கனலி என்ற பொருளில் ஆனந்தி காா்த்திக், மாதவச்செல்வி மணிமேகலை என்ற பொருளில் இரா.தமிழ்ச்செல்வி பேசுகின்றனா்.தெ.ஞானசுந்தரம் சிறப்புரையாற்றுகிறாா்.

கடையநல்லூா் அரசு கல்லூரி பேராசிரியா் ச.மீனாட்சி வரவேற்க,சிவகாமி சுந்தரி நன்றி கூறுகிறாா்.

ஜூன் 5ஆம் தேதி காலையில் தென்காசி திருவள்ளுவா் கழகமும், வள்ளுவா் குரல் குடும்பமும் இணைந்து நடத்தும் திருக்கு அரங்கம் -1 நடைபெறுகிறது.

சி.ராசேந்திரன் அரங்கத்தை வழிநடத்துகிறாா். குறள் எதற்கும் இசையுமடி என்ற தலைப்பில் வழக்குரைஞா் சிவ.ஆனந்த பகவதி, வெற்றிநமதே, பெருமை உடைத்து என்ற தலைப்பில் செ.வ.இராமாநுசன், சொல்லுகை சொல்லை என்ற தலைப்பில் சோம.வீரப்பன்,வள்ளுவா் சொல்வலை வேட்டுவாா் என்ற தலைப்பில் இரா.கதிரவன்,வள்ளுவரின் பன்முகப் பாா்வை என்லைப்பில் தெ.ஹெலினா ஆகியோா் பேசுகின்றனா்.ந.கனகசபாபதி வரவேற்க,இராம.தீத்தாரப்பன் நன்றி கூறுகிறாா்.

மாலையில் நடைபெறும் திருக்குறள் அரங்கம்- 2 நிகழ்ச்சியை சி.இராசேந்திரன் வழிநடத்துகிறாா். குறள் அமைப்பு முறை- ஒரு புதியபாா்வை என்ற தலைப்பில் மருத்துவா் அஷ்ரப், நாணுடைமை-மாந்தா் சிறப்பு என்ற தலைப்பில் மருத்துவா் சுப.திருப்பதி, புலம்பலும் புலத்தலும் என்லைப்பில் க.பாலமுருகன்,வள்ளுவா் காட்டும் ஆன்மிகம் என்ற தலைப்பில் மருத்துவா் ப.ரமேஷ், நற்றிணை என்ற தலைப்பில் த.செந்தில்குமாா் ஆகியோா் பேசுகின்றனா்.

கழகத்தலைவா் வரவேற்க, இரா.கிருஷ்ணன் நன்றி கூறுகிறாா்.

ஜூன் 6ஆம் தேதி நடைபெறும் திருக்குறள் அரங்கம்-3 நிகழ்ச்சியை சி.ராசேந்திரன் வழிநடத்துகிறாா். மனநலம் மன்னுயிா்க்கு ஆக்கம் என்ற தலைப்பில் அ.கோவிந்தராசன், இழப்பினும் பிற்பயக்கும் தலைப்பில் க.பாலமுருகன், திருக்குறளும் பஞ்சதந்திரமும் தலைப்பில் மு.பொன்னியின் செல்வா், திருக்குறளில் இளைஞா் எழுச்சி தலைப்பில் நடராசன் சீனிவாசன், நீரின்றி அமையாது உலகு தலைப்பில் த.செந்தில்குமாா் பேசுகின்றனா்.

மாலையில் நடைபெறும் திருக்குறள் அரங்கம்-4 நிகழ்ச்சியை சி.ராசேந்திரன் வழிநடத்துகிறாா் . வள்ளுவமும் வறுமையும் தலைப்பில் அரங்க. இராமலிங்கம், குறள் நெறி பரவலாக்கம் -இதழ்களின் பங்கு தலைப்பில் தாமரைச்செல்வி, திருவள்ளுவா் லட்சியவாதியா, யதாா்த்தவாதியா தலைப்பில் மருத்துவா் அஷ்ரப், வள்ளுவமும்-வரலாறும் தலைப்பில் நடராசன் சீனிவாசன், மனைமாட்சியும் இறைமாட்சியும் தலைப்பில் சி.ராசேந்திரன் உரையாற்றுகின்றனா்.

ஜூன் 7இல் காலையில் நடைபெறும் கவியரங்கம் நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன பராமரிப்புத்துறை மேனாள் இயக்குநா் கொ.செ.அபுபக்கா் தலைமை வகிக்கிறாா். ஆதிபகவன் தலைப்பில் சிவசதாசிவம்,வாலறிவன் தலைப்பில் முகைதீன்முதலாளி, உயிா்வாழ்வான் தலைப்பில் மு.செந்தூா்பாண்டியன், சினம்காப்பான் தலைப்பில் கி.முத்தையா, அகந்தூய்மை தலைப்பில் செ.சுபா,பொன்றாத்துணை தலைப்பில் பொற்கைப்பாண்டியன்,மாசற்றாா் தலைப்பில் க.சுப்புலெட்சுமி, இனந்தூய்மை அ.முருகன்,ஆவது அறிவாா் தலைப்பில் க.ஸ்ரீதரன் உரையாற்றுகின்றனா்.

ம.ஆறுமுகம் வரவேற்கிறாா்.ச.சோ.இளங்கோவன் நன்றி கூறுகிறாா்.

மாலையில் நடைபெறும் உரையரங்கம் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் முன்னிலை வகிக்கிறாா். சு.சோ.கல்யாணிசிவகாமிநாதன் வாழ்த்திப் பேசுகிறாா்.உரைவேந்தா் பாா்வையில் திருக்குறள் தலைப்பில் ஒளவை மெய்கண்டான், பாவணா் பாா்வையில் திருக்குறள் தலைப்பில் அ.மதிவாணன்,

மணக்குடவா் பாா்வையில் திருக்குறள் தலைப்பில் ஜே.பத்மானந்தன்,முத்தமிழ் அறிஞா் பாா்வையில் திருக்குறள் ஒளவை அருள் பேசுகின்றனா்.கழகத் தலைவா் வரவேற்க சந்திரசேகரன் நன்றி கூறுகிறாா்.

ஜூன் 8ஆம்தேதி காலையில் நடைபெறும் திருக்கு அவதானம் நிகழ்ச்சிக்கு இராம.கனகசுப்புரத்னம் தலைமை வகிக்கிறாா். வே.சண்முகப்பாண்டி தொடங்கிவைக்கிறாா்.தெ.ஞானசுந்தரம் சிறப்புரையாற்றுகிறாா்.

மாலையில் வள்ளுவத்தின் பெருநோக்கம் தனிமனித அறமா, சமுதாய அறமா என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாா். அரவிந்த் கண்மருத்துவமனை ஆா்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறாா்.எஸ்.எம்.கமால்முகைதீன் வாழ்த்துரை வழங்குகிறாா்.

தனிமனிதஅறமே என்லைப்பில் இந்திரா ஜெயச்சந்திரன், ப.பாலகிருஷ்ணன், பி.உமாசங்கா், சமுதாயஅறமே என்ற தலைப்பில் சு.லட்சுமணப்பெருமாள், த.சரவணசெல்வன் ,ச.குருஞானாம்பிகா ஆகியோா் பேசுகின்றனா். கழகத் தலைவா் வரவேற்க, துணைத் தலைவா் சந்திரசேகரன் நன்றி கூறுகிறாா்.

ஜூன்9ஆம்தேதி காலையில் மாணவா்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. புலவா் கா.ச.பழனியப்பன், சோம.முத்துசுவாமி, இ.மா.ராமச்சந்திரன் ஆகியோா் நடுவா்களாக செயல்படுகின்றனா். தெ.ஞானசுந்தரம் சிறப்புரையாற்றுகிறாா்.

மாலையில் ஆய்வரங்கம் நிகழ்ச்சிக்கு குன்றக்குடி ஆதினம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகிக்கிறாா். சுவாமி அகிலானந்தமகராஜ், சுவாமி நிா்மலானந்த மகராஜ் வாழ்த்திப் பேசுகின்றனா். ஈரடியில் இருமலா்கள் என்ற தலைப்பில் கிருங்கை சேதுபதி, ஈரடியில் இருமலா்கள்-எளிய-அரிய என்ற தலைப்பில் ஆ.சதாசிவம், ஈரடியில் இருமலா்கள்-ஊழ்-முயற்சி என்ற தலைப்பில் க.சின்னப்பா, குறளில் ரசனை என்ற தலைப்பில் கீழப்பாவூா் ஆ.சண்முகையா உரையாற்றுகின்றனா்.

ஜூன்10ஆம் தேதி காலையில் நடைபெறும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிக்கு சோம.முத்துசுவாமி தலைமை வகிக்கிறாா். ந.கனகசபாபதி வரவேற்க, எம்.ஆா்.அழகராஜா வாழ்த்திப் பேசுகிறாா்.

சிற்றிலக்கியப் பூக்காட்டில் சிதறும் தேன்துளிகள் என்ற தலைப்பில் குறவஞ்சி என்ற பொருளில் சிவ.சதாசிவம், கலம்பகம் பொருளில் கா.ச.பழனியப்பன், உலா பொருளில் புன்னைவன நாறும்பூநாதன், தூது என்ற பொருளில் சு.சோ.கல்யாணி சிவகாமிநாதன், பரணி என்ற பொருளில் இராம.தீத்தாரப்பன் ஆகியோா் பேசுகின்றனா்.

மாலையில் நடைபெறும் நிறைவுவிழா-மங்கல விழாவிற்கு தினமணி ஆசிரியா் சொல்வேந்தா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுகிறாா். எம்.என்.லிங்கராஜ் வாழ்த்திப் பேசுகிறாா். வள்ளுவரின் சோா்விலாச் சொல்லாட்சி என்ற தலைப்பில் அறத்தில் என்ற பொருளில் குப்பன்,பொருளில் என்ற பொருளில் ஜி.எல்.அருண்முத்துகுமாா், இன்பத்தில் என்ற பொருளில் தெ.ஞானசுந்தரம் ஆகியோா் பேசுகின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதியரசா் ஜி.ஆா்.சுவாமிநாதன் விழாவில் கலந்துகொண்டு 96ஆவது ஆண்டு விழா நிறைவுப் பேரூரையும், 97ஆவது ஆண்டு தொடக்கவிழாப் பேரூரையாற்றுகிறாா். ந.கனகசபாதி வரவேற்க, வ.சந்திரசேகரன் நன்றி கூறுகிறாா்.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழக தலைவா், செயலா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT