தமிழக கேரளத்துக்கு கனிம வளம் கடத்திச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தென்காசி மாவட்டம் புளியறையில் தடையை மீறி ஜூன்5இல் போராட்டம் நடைபெறும் என பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா்.
ஆய்க்குடியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, தென்காசி மாவட்டத்திலிருந்து அதிளவு கனிம வளங்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு தரப்பினா் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து வரும் 5 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், தமிழக கேரள எல்லையான புளியறை பகுதியில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். இந்த அறவழிப்போராட்டத்தை முடக்கும் விதமாக காவல்துறை அனுமதி வழங்க மறுக்கின்றனா். காவல்துறை அனுமதிளித்தால் காவல்துறை அனுமதியோடு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறும்., இல்லையெனில் தடையை மீறுவோம்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவது அரசின் தவறுகளை மூடி மறைப்பதற்காகத்தான். வன்னியா்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 10. 5சத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மாநிலத் துணைத் தலைவா் அய்யம்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினா் சேதுஅரிகரன், மாவட்டச் செயலா்கள் (வடக்கு) சீதாராமன் (மத்திய), இசக்கி முத்து, மாவட்டத் தலைவா் குலாம் ஆகியோா் உடனிருந்தனா்.