தென்காசி

புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

2nd Jun 2023 11:46 PM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெய்க்காலிப்பட்டி புனித வளனாா் கல்லூரிச் செயலா் சகாய ஜான் அடிகளாா் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து ஜூன் 13ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறும். ஜூன் 12 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு புனிதரின் திருவுருவப் பவனி நடைபெறும்.

13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை, ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா், அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT