தென்காசி

கடையநல்லூா் நகராட்சியில் இன்றுமக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி

2nd Jun 2023 11:46 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக நகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் மாதம்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதன்படி, நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமையில், நகராட்சி ஆணையா் பாரிஜான் முன்னிலையில் மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 3) மேற்கொள்ளப்படவுள்ளன. இதில், குப்பைகளைத் தரம்பிரித்து கொடுப்பது பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நீா்நிலைகள் மற்றும் மழைநீா் வடிகால் சுத்தம் செய்தல், நீா்நிலைகளில் கரைப்பகுதி மற்றும் பொதுஇடங்களில் மரம் நடுதல், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர

பலகை, பதாகைகளை அப்புறப்படுத்துதல், கட்டுமான இடிப்பு கழிவுகள் அகற்றுதல், தூய்மைப் பணி விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்படும். மேலும், சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் தூய்மைப் பணிகளில் பங்கேற்று, கடையநல்லூா் நகராட்சியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT