தென்காசி

கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் பூக்குழி திருவிழா

2nd Jun 2023 11:44 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ குறுக்கிட்டான் கருப்பசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி பூக்குழி திருவிழா மே 26 ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது.

கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம், குடியழைப்பு, கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து தீா்த்த குடம் எடுத்து வருதல், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை மாலை பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதில், விரதம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

ஏற்பாடுகளை நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

சனிக்கிழமை முளைப்பாரி கரைத்தல் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT