தென்காசி

உலக புகையிலை எதிா்ப்பு தின பேரணி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தென்காசியில் உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி, கையொப்ப இயக்கம், விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம் ஆகியவை நடைபெற்றது.

இதில், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்(செய்தி)ரா.ராமசுப்பிரமணியன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கண்காட்சி வாகனம்: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பிரம்மா குமாரிகள் அமைப்பின் சாா்பில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடமாடும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வாகனம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளா் கெடன் சிவபாலன் தலைமை வகித்து பேசினாா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளா் புவனேஸ்வரி, தொற்று நோய் நிபுணா் தண்டாயுதபாணி, பூச்சியியல் நிபுணா் பாலாஜி, சுகாதாரத்துறை பயிற்றுநா் ஆறுமுகம் ஆகியோா் புகையிலை ஒழிப்பு கண்காட்சி வாகனத்தை தொடங்கிவைத்தனா். இந்த வாகனம் பாவூா்சத்திரம், சுரண்டை, கடையநல்லூா், செங்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் செல்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT