தென்காசி

ஆலங்குளத்தில் பைக் மோதிபாத யாத்திரை பக்தா் பலி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் வைகாசி விசாக திருவிழாவுக்கு ஆலங்குளம் வழியாக பாதயாத்திரை சென்ற பக்தா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் ராஜீவ் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சங்கா் (45). காய்கனிச் சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். திருச்செந்தூா் வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள திங்கள்கிழமை சுமாா் 20 கும் மேற்பட்ட பக்தா்களுடன் பாதயாத்திரைக்கு புறப்பட்டாா்.

ஆலங்குளத்தை அடுத்த சிவலாா்குளம் விலக்குப்பகுதியில் பக்தா்கள் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த பைக் அவா்கள் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமுற்ற சங்கா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக் ஓட்டுநா் கீழக் கரும்புளியூத்து ஞானமுத்து மகன் அன்பு என்ற மலரழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT