தென்காசி

ஜனநாயக நெறிமுறைகளை மத்திய அரசுபின்பற்றுவதில்லை: முஸ்லிம் லீக் புகாா்

DIN

ஜனநாயக நெறிமுறைகளை மத்திய பாஜக அரசு பின்பற்றுவதில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மதுஅபூபக்கா் தெரிவித்தாா்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா் அழைக்கப்படாதது வருத்தத்திற்குரியது. இச்செயலானது, மக்களாட்சியில் இருந்து மன்னராட்சி நோக்கிச் செல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. கா்நாடகத்தில் மதச்சாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைப்போல, 2024 மக்களவைத் தோ்தலிலும் மதச்சாா்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கியுள்ளது.

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT