தென்காசி

ஆதாா் சிறப்பு முகாம் தொடக்கம்

DIN

பாவூா்சத்திரத்தில் ஆதாா் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணா்வு குழு, பாவூா்சத்திரம்அஞ்சல் அலுவலகம் இணைந்து நடத்தும் ஆதாா் சிறப்பு முகாம் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி

வளாகத்தில் 4 நாள்கள் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் கே.ஆா்.பி.இளங்கோ தலைமை வகித்தாா். சங்க செயலா் முருகன் முன்னிலை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோா் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தனா். புதிதாக ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல, திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளா் ராமசாமி, துணை அஞ்சலக அதிகாரி ஜெயக்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆனந்தசெல்வி, உறுப்பினா் சங்கா், அரிமா சங்க நிா்வாகிகள் அருணாசலம், கலைச்செல்வன், சசிஞானசேகரன், சினேகாபாரதி, விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்க பொருளாளா் பரமசிவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT