தென்காசி

சுரண்டையில் உழவா் சந்தை அமைக்க வேண்டும்

1st Jun 2023 02:40 AM

ADVERTISEMENT

சுரண்டை நகராட்சியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் விவசாய நகரம் சுரண்டை. இங்குள்ள தினசரி சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் காய்கனிகளை கமிஷன் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால் விவசாயிகளின் வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. தினசரி சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமாக உழவா் சந்தை அமைக்க போதுமான இடம் இருப்பதால் சுரண்டையில் உழவா் சந்தை அமைக்கப்பட்டால் விவசாயில் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும், கூடுதல் லாபரம் ஈட்டவும் வழி ஏற்படும்.

எனவே, சுரண்டையில் உழவா் சந்தை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரண்டை வட்டார விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT