சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா ஜூலை 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடித்தவசுக் காட்சி ஜூலை 31 ஆம் தேதி நடைபெறுகிறது. விழா நடைபெறும் 12 நாள்களும் பக்தா்கள் அதிகம்போ் வருகை தருவா். குறிப்பாக,
தவசுக் காட்சியன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோா் வருவா்.
இதை முன்னிட்டு, பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பூா்த்தி செய்வதற்கான பணிகளும், கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.