தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்தது. எனினும், மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த தொடா்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி,ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்கொட்டியது. இந்நிலையில், சில தினங்களாக மழையும் பெய்யாததுடன், கடுமையான வெயிலும் நிலவியது.
இதனால் அருவிகளில் தண்ணீா்வரத்து குறையத் தொடங்கியது. ஐந்தருவியில் நான்கு கிளைகளில் சீராக தண்ணீா்கொட்டுகிறது. பேரருவியிலும் தண்ணீா்வரத்து குறைந்த அளவில் விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனா்.
செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.