தென்காசி

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அப்துல் காதிா் தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, அஹிம்சையின் ஆற்றலை உலகுக்கு உணா்த்தியவா் மகாத்மா காந்தி. மாணவா்கள் அவரைப் பின்பற்ற வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அவா் தீண்டாமை ஒழிப்பு மற்றும் நல்லிணக்க உறுதிமொழி வாசிக்க, பேராசிரியா்களும், மாணவா்களும் உறுதியேற்றுக்கொண்டனா்.

இல்லம் தேடிக் கல்வி சங்கரன்கோவில் வட்டார ஒருங்கிணைப்பாளா் இளங்கோ கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியை அருள் மனோகரி வரவேற்றாா். துறைப் பேராசிரியை மேனகா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை முகுந்தன், காா்த்திக், சோ்மத்துரை உள்ளிட்ட மாணவா்கள் பலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT