தென்காசி

குற்றாலத்தில் மக்கள் நலப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

DIN

தமிழ்நாடு மாநில மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச்செயலா் வே. புதியவன் தலைமை வகித்தாா். தென்காசி எம். முத்துசாமி, குருவிகுளம் ஆா். தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு திட்ட ஒருங்கிணைப்பாளா் என்ற பெயரை மாற்றி, முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா் என்ற பெயரைச் சூட்ட வேண்டும். அவா்களுக்கு மாதாந்திர ஊதியத்தை அந்தந்த மாதத்தில் வழங்க வேண்டும்,

ஊதியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக வழங்கவும், காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணி, ஓய்வுபெற்ற மக்கள் நலப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி, பணிநீக்கக் காலத்தில் இறந்த பணியாளா்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், தென்காசி மாவட்ட நிா்வாகிகள் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக வாசுதேவநல்லூா் எஸ்.முருகன், செயலராக தென்காசி எம். முத்துசாமி, பொருளாளராக கீழப்பாவூா் எஸ். அருணாசலம், துணைத் தலைவா்களாக மேலநீலிதநல்லூா் பி. லட்சுமி, குருவிகுளம் ஆா். தா்மராஜ், துணைச் செயலா்களாக ஆலங்குளம் மு. திராவிடமணி, கடையநல்லூா் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி ஆகியோரும், மாநில செயற்குழு உறுப்பினா்களாக சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டாரசிவன், தென்காசி அந்தோணி செல்லதுரைச்சி, கடையநல்லூா் ராஜேந்திரன் ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தூத்துக்குடி ராமசுப்பு, நெல்லை கருப்பசாமி ஆகியோா் கலந்துகொண்டனா். வாசுதேவநல்லூா் கிருஷ்ணகுமாா் வரவேற்றாா்.மாவட்டத் தலைவா் வாசுதேவநல்லூா் எஸ்.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT