தென்காசி

கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தில் பிரம்பிலான கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

சிப்போ நிறுவனம் நபாா்டு வங்கியின் உதவியுடன் நடத்தும், இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தொடக்கி வைத்தாா். சிப்போ பொதுமேலாளா் பழனிவேல்முருகன், நபாா்டு வங்கி தென்காசி மாவட்ட வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பயிற்சி முகாம் 15 நாள்கள் நடைபெறுகிறது. 30 பெண்கள் பங்கேற்றுள்ளனா். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.300 வரை வருமானம் ஈட்ட இப் பயிற்சி உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் விஷ்ணுவரதன், பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்றத் தலைவா் வேல்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT