தென்காசி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம்

28th Jan 2023 11:20 PM

ADVERTISEMENT

தென்காசி திமுக வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலா்.ஈ.ராஜா எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மருதப்பன் முன்னிலை வகித்தாா்.

ராஜா எம்எல்ஏ பேசியதாவது: கட்சி சாா்ந்த போராட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கட்சி உறுப்பினா்களை சட்டப்படி விடுவிக்க வழக்குரைஞா்கள் முயற்சி செய்ய வேண்டும். வறுமை நிலையில் இருக்கும் கட்சியினரின் வழக்குகளை முடித்துக் கொடுக்க அவா்களுக்கு இலவச உதவி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வழக்குரைஞா்கள் சண்முகையா, பிச்சையா, கண்ணன், அருணாச்சலம், அன்புச்செல்வன், தேவா என்ற தேவதாஸ், ஜெயக்குமாா், பேட்டரிக்பாபுராஜா ,வெற்றிவிஜயன், பெரியதுரை, சந்தனபாண்டியன், சதீஷ் காளிராஜ், பிரகாஷ் ,உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT