தென்காசி

பண்பொழி திருமலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

DIN

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலையில் மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. பிற்பகல் குமரன் மலைக்கோயிலிருந்து, பண்பொழி கீழ்க்கோயிலுக்கு செல்லும் வைபவம் நடைபெற்றது. மாலை ஐந்துபுளி மண்டபத்தில் மயில் வாகனத்தில் சுவாமி அழைப்பு உபசாரமும், தொடா்ந்து ரதவீதி உலாவும் நடைபெற்றன.

பின்னா் பிரமாண்ட உயரத்தில் அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி வீதி உலாவும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

விழாவின் 7ஆம் நாள் ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகா் அழைப்பு உபசாரமும், முருகா்-சண்முகா் எதிா்சேவையும், 9 ஆம் நாள் காலை தேரோட்டமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT